இந்திய விமானப்படை தளபதியாக அசுதோஷ் தீட்சித் பொறுப்பேற்றுக் கொண்டார்

ஏர் சீஃப் மார்ஷல் அசுதோஷ் தீட்சித், இந்திய விமானப்படையின் தளபதியாக (2026 அக்டோபர் 31) இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்திய விமானப்படையின் 29-வது தளபதியாக பதவியேற்றுக் கொண்ட அவர், நாட்டிற்கு 42 ஆண்டுகள் சிறப்பான சேவையாற்றி வந்துள்ள  ஏர் சீஃப் மார்ஷல் ஏ பி  சிங்  ஓய்வுபெறுவதையடுத்து இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

தேசிய பாதுகாப்பு அகாதமியின்  முன்னாள் மாணவரான அசுதோஷ் தீட்சித், 1986 டிசம்பர் 6 அன்று இந்திய விமானப்படையின் போர் விமானப் பிரிவில் அதிகாரியாக பணியில் சேர்ந்தார்.

40 ஆண்டு காலப்  பணி அனுபவம் கொண்ட இவர், செயல்பாடுகள், விமானப் பரிசோதனை, திறன் மேம்பாடு, கூட்டுப் படைப் பணிகள் எனப் பல்வேறு பிரிவுகளில் ஆழ்ந்த அனுபவம் பெற்றவர்.

சிறந்த போர் விமானி, தகுதியுள்ள விமானப் பயிற்சியாளர், சோதனை விமானி போன்ற பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட இவர், மிராஜ்-2000, பல்வேறு ரக மிக் விமானங்கள், ஜாகுவார், போக்குவரத்து விமானங்கள் எனப் பல்வேறு வகையான விமானங்களை மொத்தம் 3,300 மணி நேரத்திற்கும் மேலாக இயக்கிய அனுபவம் கொண்டவர்.

Leave a Reply