ஏர் மார்ஷல் இந்தர்பால் சிங் வாலியா, விமானப் படைத் துணைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். 01 நவம்பர் 2026 முதல் அவர் இந்தப் பொறுப்பை வகிப்பார். தற்போது, அவர் விமானப் படையின் கிழக்குப் பகுதி தளத்தின் தலைமைத் தளபதியாக உள்ளார்.
இந்தர்பால் சிங் வாலியா, தேசிய பாதுகாப்பு அகாதமியின் முன்னாள் மாணவர் ஆவார். இவர் 11 ஜூன் 1988 அன்று இந்திய விமானப்படையின் போர் விமானப் பிரிவில் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவர் மிக்-21, மிக்-23, மிக்-27, ஜாகுவார், சு-30 எம்கேஐ விமானங்களின் அனைத்து வகைகளிலும் தகுதி பெற்றுள்ளார். ஏறக்குறைய 40 ஆண்டுகள் நீடித்த தமது பணிக்காலத்தில், இவர் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
அவரது சிறந்த சேவையைப் பாராட்டி, அவருக்கு 2008-ல் வாயு சேனா பதக்கமும், 2018-ல் அதி விசிஷ்ட சேவா பதக்கமும் வழங்கப்பட்டன.
திவாஹர்
