கொல்கத்தாவில் மூன்று பேரை போதுமான ஆடையின்றி சாலையில் அழைத்துச் சென்ற சம்பவம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை மேற்கொள்கிறது.

மேற்குவங்கம் கொல்கத்தாவில் காவல் துறையினர் மூன்று பேரை அவர்களுடைய இடுப்பில் கயிறு கட்டி ஊர்வலமாக அழைத்து சென்றதாக ஊடகங்களில் செய்தி வெளியானதை அடுத்து அது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொள்கிறது. இச்சம்பவத்திற்கு முந்தைய நாள் 18 வயதுடைய இளைஞர், அவருடைய 19 வயதுடைய நண்பர்  ஆகியோர் ஒரு சிறுமியுடன் காணப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அச்சிறுமியின் குடும்பத்தினரால் அவரது வீட்டில் கடுமையாகத் தாக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டனர். அந்த வீட்டுக்கு வந்த இளைஞரின் தந்தையும் தாக்கப்பட்டார். அதன்பின் அவர்கள் மூன்று பேரின் ஆடைகளையும் களையச் செய்து துப்பாக்கி முனையில் சாலையில் ஆடையின்றி நடக்க வைத்தனர்.

இது மனித உரிமைகளை மீறும் விவகாரம் என்பதால் இது தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு கொல்கத்தா காவல் துறை ஆணையருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Leave a Reply