புத்தொழில் நிறுவனங்களுக்கும் தொழில்துறைக்கும் இடையேயான வலுவான ஒத்துழைப்பு தேவை என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தியுள்ளார்.
புது தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் அக்டோபர் 27 முதல் 29 வரை நடைபெற்று வரும் ‘வளர்ந்து வரும் அறிவியல், தொழில்நுட்பம் & புத்தாக்க மாநாட்டில், புத்தொழில் நிறுவனங்கள், அறிவியல் நிறுவனங்கள், பல்வேறு துறைகளின் தொழில்நுட்பங்கள் குறித்த கண்காட்சியை டாக்டர் ஜிதேந்திர சிங் பார்வையிட்டுப் பேசினார்.
ஆராய்ச்சி, மேம்பாட்டு நிலையில் உள்ள உள்நாட்டு கண்டுபிடிப்புகளை, வர்த்தக ரீதியில் பரவலான பயன்பாட்டிற்குக் கொண்டு செல்லும் வகையில், இத்தகைய ஒருங்கிணைந்த நடைமுறைகளை உருவாக்குவதில் மத்திய அரசு முக்கியப் பங்காற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவின் விரிவடைந்து வரும் புத்தாக்கச் சூழல், புத்தொழில் நிறுவனங்கள் தொழில்துறையுடனும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தக்கூடிய பிற அமைப்புகளுடனும் இணைந்து செயல்படவும், நடைமுறைக்கு ஏற்ற தீர்வுகளை உருவாக்கவும், அவற்றை விரிவுபடுத்தவும் பெரும் வாய்ப்புகளை வழங்குகிறது என்று அமைச்சர் கூறினார்.
இந்தியாவின் புத்தாக்க அடிப்படையிலான வளர்ச்சியை வலுப்படுத்த, சம்பந்தப்பட்ட அனைவரும் முன்வந்து இந்த வாய்ப்புகளைச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
எம்.பிரபாகரன்
