பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று (18.07.2026) ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் குழுவினருடன் உரையாடி, விக்ரம்-1 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்காக அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். இது இந்தியாவின் விண்வெளிப் பயணத்தில் ஒரு திருப்புமுனையான தருணம் என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். விண்வெளித் துறையில் அதிகரித்து வரும் தனியார் துறையின் பங்களிப்பு, புதிய எல்லைகளைத் திறந்து, புத்தாக்கத்தை வேகப்படுத்துகிறது என அவர் கூறியுள்ளார்.
இந்தச் சாதனை, எண்ணற்ற இளைஞர்களைப் பெரிய கனவுகளைக் காணவும், அச்சமின்றிப் புதுமைகளைப் படைக்கவும் ஊக்குவிக்கும் என்று நரேந்திர திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் குழுவினருடன் பேசி, விக்ரம்-1 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு வாழ்த்துத் தெரிவித்தேன்.
இந்தியாவின் விண்வெளிப் பயணத்தில் இது ஒரு திருப்புமுனையான தருணம். விண்வெளித் துறையில் அதிகரித்து வரும் தனியார் துறையின் பங்களிப்பு, புதிய எல்லைகளைத் திறந்து, புத்தாக்கத்தை வேகப்படுத்துகிறது.
இந்தச் சாதனை, எண்ணற்ற இளைஞர்களைப் பெரிய கனவுகளைக் காணவும், அச்சமின்றிப் புதுமைகளைப் படைக்கவும் ஊக்குவிக்கும்.”
திவாஹர்
