பொதுப்பணித் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் துறை வாரியாக ஆய்வுக்கூட்டம் நடத்தி வருகிறார். இக்கூட்டங்களில் துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்று வருகின்றனர். இம்மாத இறுதியில் தாக்கல் செய்யப்பட உள்ள தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கையையொட்டி இக்கூட்டங்கள் நடைபெறுவதாக கூறப்படுகிறது.தமிழ்நாடு கலாச்சாரம்

இந்த நிலையில் முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று பொதுப்பணித் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் மரிய வில்சன், தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், இ.ஆ.ப., நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சித்திக், இ.ஆ.ப., பொதுப்பணித் துறை செயலாளர் செல்வராஜ், இ.ஆ.ப. மற்றும் துறைத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply