நியூயார்க்கில் நடைபெற்ற பாய்மரக் கப்பல்கள் அணிவகுப்பில் வெற்றிகரமாக பங்கேற்ற பிறகு இந்தியக் கடற்படையின் பயிற்சிக் கப்பலான ஐஎன்எஸ் சுதர்ஷினி 2026 ஜூலை 12 அன்று பாஸ்டன் வந்தடைந்தது. செயில் பாஸ்டன் 2026 தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் நடைபெற்ற கப்பல்களின் பிரமாண்ட அணிவகுப்பில் இக்கப்பல் பங்கேற்றது.
பாஸ்டன் நகருக்குள் கப்பல்கள் நுழையும் நிகழ்ச்சி, கப்பல்களின் பிரம்மாண்ட அணிவகுப்பு ஆகியவற்றுக்காக பாஸ்டனில் உள்ள இந்திய துணைத்தூதர் திரு ரகுராம் சாஸ்திரி, ஐஎன்எஸ் சுதர்ஷினியில் பயணித்தார். இந்திய மூவண்ணக் கொடியுடன் பயணித்த ஐஎன்எஸ் சுதர்ஷினி பாஸ்டன் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்படுவதற்கு முன்பாக கேசில் தீவு, சீபோர்ட் மாவட்டம் உள்ளிட்ட முக்கிய இடங்களைக் கடந்து சென்றது.
20-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 60-க்கும் அதிகமான கப்பலகளைக் கொண்ட சர்வதேச குழுவில் இணைந்துள்ள ஐஎன்எஸ் சுதர்ஷினி தற்போதைய லோக்கயான் 2026 கடற்பயணத்தின் போது இந்தியாவின் கடல்சார் தூதுவராக செயல்படுகிறது. கடல்சார் நடவடிக்கை சர்வதேச நற்பெயர், கலாச்சாரப் பரிமாற்றம் ஆகியவற்றில் இந்தியக் கடற்படையின் அர்ப்பணிப்பை வலுப்படுத்தும் வகையில் இக்கப்பலுக்குள் 2026 ஜூலை 12 முதல் 15-ம் தேதி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
நார்ஃபோல்க், பால்டிமோர், நியூயார்க் துறைமுகங்களில் வெற்றிகரமான பயணங்களைத் தொடர்ந்து செயில் பாஸ்டன் 2026-ன் ஐஎன்எஸ் சுதர்ஷினியின் பங்கேற்பு இந்தியா – அமெரிக்கா இடையேயான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதுடன் இந்தியாவின் வளமான கடல்சார் பாரம்பரியத்தை உலக நாடுகளுக்கு எடுத்துரைக்கிறது
எம்.பிரபாகரன்
