அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சி சபையின் பாரம்பரிய அறிவு டிஜிட்டல் நூலக அணுகல் குறித்த ஒப்பந்தத்தில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் கையெழுத்திட்டன.

அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சி சபையின் பாரம்பரிய அறிவு டிஜிட்டல் நூலக அணுகல் குறித்த ஒப்பந்தத்தில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் கையெழுத்திட்டன. 2026 ஜூலை 9 அன்று மெல்பெர்னில் நடைபெற்ற 3-வது இந்தியா – ஆஸ்திரேலியா வருடாந்தர உச்சிமாநாட்டின் போது, இந்த ஒப்பந்தத்தில் அறிவுசார் சொத்துரிமைக்கான ஆஸ்திரேலிய அமைப்பு கையெழுத்திட்டது.

தவறான காப்புரிமைகள் வழங்கப்படுவதன் மூலம் இந்தியாவின் பாரம்பரிய அறிவுசார் சொத்தில் முறைகேட்டை தடுப்பதற்கு பாரம்பரிய அறிவு டிஜிட்டல் நூலகம், இந்த வகையில் முதலாவதாக இந்தியாவால் உருவாக்கப்பட்டது. இப்போதைய ஒப்பந்தத்தின்படி, ஆஸ்திரேலியாவின் காப்புரிமை சட்டங்கள், ஆய்வு நடைமுறைகளுக்கு இணங்க காப்புரிமை விண்ணப்பங்களை ஆய்வு செய்யும்போது, பொருத்தமானவற்றை அடையாளம் காண ஆஸ்திரேலியாவின் அறிவுசார் சொத்துரிமை அமைப்பு இந்த நூலக தரவு தளத்தை பயன்படுத்தும்.

இந்த ஒப்பந்தத்தின் அமலாக்கத்தை ஆஸ்திரேலிய அறிவுசார் சொத்துரிமை அமைப்பின் ஆணையர் திரு ஆண்ட்ரூ வில்கின்சனும் அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சி சபையின் தலைமை இயக்குநர் டாக்டர் என் கலைசெல்வியும் பாரம்பரிய அறிவு டிஜிட்டல் நூலகப்பிரிவின் தலைவர் டாக்டர் விஸ்வஜனனி ஜெ சட்டிகெரியும் கண்காணிப்பார்கள்.

Leave a Reply