நாட்டின் சுகாதாரத்துறையின் உட்கட்டமைப்பு பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது !– மத்திய அமைச்சர் ஜெ பி நட்டா.

ஐதராபாதின் பிபிநகரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் செயல்பாடுகளை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜெ பி நட்டா இன்று ஆய்வு செய்தார்.

அப்போது பேசிய திரு ஜெ பி நட்டா, பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், நாட்டின் சுகாதாரத்துறை உட்கட்டமைப்பு, திறன் விரிவாக்கத்தில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறினார். 20-ம் நூற்றாண்டின் இறுதி வரை நாட்டில் ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை மட்டுமே இருந்த நிலையில், முன்னாள் பிரதமர் திரு அடல் பிகாரி வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் மேலும் 6 எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டப்பட்டதாக சுட்டிக்காட்டினார். அதைத் தொடர்ந்து மேலும் 16 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டது. இதன் மூலம் தற்போது நாட்டில் 23 எய்ம்ஸ் மருத்துவமனைகள் உள்ளன. இவற்றில் 18 மருத்துவமனைகள் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளன.

நாட்டில் 150 கோடி மக்களுக்கு சேவையாற்றும் வகையில், 1.85 லட்சம் ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்கள் செயல்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பிபிநகரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தற்போது 132 பேராசிரியர்கள் உள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த மருத்துவமனை தொடங்கப்பட்டவுடன் எம்பிபிஎஸ் படிப்புகள் உடனடியாகத் தொடங்கப்பட்டதாகவும் இரண்டு பிரிவுகள் படிப்புகளை நிறைவு செய்துள்ளதாகவும் திரு ஜெ பி நட்டா தெரிவித்தார்.

Leave a Reply