இந்திய கடற்படையின் பாய்மரக்கப்பலான ஐஎன்எஸ் சுதர்ஷினி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மேற்கொண்ட பயணத்தை 2026 ஜூலை 8 அன்று நிறைவு செய்தது. இது இந்தியாவின் வளமையான கடல்சார் பாரம்பரியத்தை வெளிப்படுத்தியது. அத்துடன் இந்தியா – அமெரிக்கா இடையேயான உத்திசார்ந்த, கலாச்சார உறவுகளையும் மேலும் வலுப்படுத்தியது.
அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் நடைபெற்ற சர்வதேச கடற்படை அணிவகுப்பு 850 நிகழ்வில் இந்தியா சார்பில் பங்கேற்றது. இந்த ஐஎன்எஸ் சுதர்ஷினி பாய்மரக்கப்பல் அணிவகுப்பில் பங்கேற்றது. அப்போது பிரம்மாண்டமான பாய்மரக்கப்பல்கள், கடற்படைக் கப்பல்களுடன் இணைந்து இந்திய தேசியக் கொடியுடன் சுதந்திர தேவி சிலையைக் கடந்தும் ஹட்சன் நதி வழியாகவும் பயணித்தது.
புரூக்லினில் இக்கப்பல் இருந்தபோது வெளிநாடு வாழ் இந்தியர்கள், உள்ளூர் மக்கள், கடல்சார் ஆர்வலர்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்வையிட்டனர். இந்தியக் கடற்படையின் பாய்மரக்கப்பல் பயிற்சி முறைகள் இந்தியாவின் வளமையான கடல்சார் பாரம்பரியம் குறித்த தகவல்களை அவர்கள் அறிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது.
திவாஹர்
