இந்திய – இஸ்ரேல் அரசுகளுக்கு இடையே 2025-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி புதுதில்லியில் கையெழுத்தான இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம், இன்று (2026 ஜூலை 04) முதல் அமலுக்கு வந்துள்ளது. இருதரப்பு பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதற்கும், பாதுகாப்பான, சிறந்த முதலீட்டுச் சூழலை உறுதி செய்வதற்கும் இந்த இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் ஒரு முக்கிய நடவடிக்கையாகும்.
சர்வதேச முதலீட்டுச் சட்டத்தின் நவீன கோட்பாடுகளையும் வளர்ந்து வரும் சட்டவியல் கோட்பாடுகளையும் பிரதிபலிக்கும் வகையில், முறையான பொதுக் கொள்கை நோக்கங்களுக்கு ஏற்ப இறையாண்மையுடனும் நெகிழ்வுத்தன்மையுடனும் இது இருப்பதோடு, முதலீட்டுப் பாதுகாப்பும் வலுவாக உள்ளது.
எல்லை தாண்டிய முதலீட்டு நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கும், இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பொருளாதாரக் ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்துவதற்கும் அந்த ஒப்பந்தம் பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா-இஸ்ரேல் இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் 2026, நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையின் இணையதளத்தில் உள்ளது.
திவாஹர்
