நாட்டின் துடிப்பான ஜனநாயகத்தை வலுப்படுத்த, துல்லியமான வாக்காளர் பட்டியல் அவசியம்: குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்.

குடியரசுத் துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன், தற்போது தில்லியில் நடைபெற்று வரும் எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்தின் கீழ், தனது படிவத்தை இன்று (04.07.2026) சமர்ப்பித்தார்.

தில்லியில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்தின் ஒரு பகுதியாக, தில்லி தலைமைத் தேர்தல் அதிகாரி திரு அசோக் குமார், தேர்தல் அதிகாரிகளுடன் இணைந்து குடியரசுத் துணைத் தலைவர் மாளிகையில் வாக்காளர் கணக்கெடுப்புப் பணிகளை மேற்கொண்டார்.

இந்த நிகழ்வில் பேசிய குடியரசுத் துணைத் தலைவர், இந்தியாவின் துடிப்பான ஜனநாயகத்தை வலுப்படுத்த, துல்லியமான, புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலைப் பராமரிப்பது அவசியம் என்று வலியுறுத்தினார். தகுதியுள்ள அனைத்து வாக்காளர்களும் இந்தச் செயல்பாட்டில் தீவிரமாகப் பங்கேற்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். சிறப்புத் தீவிர திருத்தத்தின் வெற்றியை உறுதிசெய்ய, தேர்தல் அதிகாரிகளுக்குத் தங்களின் முழு ஒத்துழைப்பையும் வழங்குமாறு அவர் மக்களைக் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply