நிலக்கரி அமைச்சகம், நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு பெறுபவர்களுக்கு அதிக நிதி நெகிழ்வுத்தன்மையை வழங்குவதற்கும், நிலக்கரித் துறையில் வணிகம் செய்வதை மேலும் எளிதாக்குவதற்கும் ஒரு முக்கிய சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 1957-ம் ஆண்டின் சுரங்கங்கள், கனிமங்கள் மேம்பாடு- ஒழுங்குமுறை சட்டத்தின் (எம்எம்டிஆர் சட்டம்) கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலக்கரிச் சுரங்கங்களுக்கு, உத்தரவாதங்களுக்கு பதிலாக காப்பீட்டுப் பிணையப் பத்திரங்களைப் பயன்படுத்துவதற்கு, 2026-ம் ஆண்டின் நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டுத் திருத்த விதிகள் மூலம் அமைச்சகம் வழிவகை செய்துள்ளது.
திருத்தப்பட்ட கட்டமைப்பு, நிலக்கரித் தொகுதி ஒதுக்கீட்டாளர்கள் தங்களின் கடமைகளை நிறைவேற்றுவதற்காக, வங்கி உத்தரவாதம் அல்லது காப்பீட்டுப் பிணையப் பத்திரம் ஆகியவற்றில் ஒன்றைத் தேர்வு செய்ய அனுமதிக்கிறது. இது நெகிழ்வுத்தன்மையை விரிவுபடுத்துகிறது.
நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டுத் திருத்த விதிகள், 2026, 22 ஜூன், 2026 தேதியிட்ட ஜிஎஸ்ஆர் 508(இ)-ன் படி அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
திவாஹர்
