பஞ்சாப் மாநிலம் ரூப்நகர் மாவட்டத்தில், 2026 ஜூன் 10 அன்று, எட்டு வயது சிறுமி ஒருவரைத் தெருநாய்கள் கடித்து, அதனால் அவர் உயிரிழந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாகவே முன்வந்து கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி தனது வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது தெருநாய்கள் அவரைத் தாக்கியதாகத் தகவல் வெளியானது.
வெளியான செய்திகள் உண்மையாக இருந்தால், இந்த சம்பவத்தில் மனித உரிமை மீறல் பிரச்சனை உள்ளதாக ஆணையம் கருதுகிறது. எனவே, இது தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு பஞ்சாப் தலைமைச் செயலாளருக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
எம்.பிரபாகரன்
