இளைஞர்களுக்கு அதிகாரம் அளித்தல், தேசிய மாணவர் படை (என்சிசி)-ல் சேருவதற்கான வாய்ப்புகளை அதிகரித்தல் ஆகியவற்றின் முக்கிய நடவடிக்கையாக ஆந்திரப்பிரதேசம், ஜார்க்கண்டில் தன்னாட்சி நிலையிலான மாநில இயக்குநகரத்தை உருவாக்குவதற்கு என்சிசி தலைமை இயக்குநரகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் நாட்டில் என்சிசி மாநில இயக்குநரகங்களின் எண்ணிக்கை 17-ல் இருந்து 19 ஆக அதிகரிக்கிறது.
ஆந்திரப்பிரதேசம், ஜார்க்கண்டில் தன்னாட்சி நிலையிலான மாநில இயக்குநகரம் அமைப்பதன் மூலம், என்சிசி மாணவர் படையினர், கல்வி நிறுவனங்களுக்கு இன்னும் நெருக்கமடையச் செய்யும். இந்த புதிய நிர்வாக அமைப்பு ஒருங்கிணைப்பை மேலும் செழுமைப்படுத்தவும், மேற்பார்வையை மேம்படுத்தவும், பயிற்சி, மேம்பாட்டு நடவடிக்கைகளில் சிறந்த ஆதரவை வழங்கவும் உதவும். அத்துடன் அம்மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்புகளை அளிக்கும்.
திவாஹர்
