ஒழுங்கமைக்கப்பட்ட தங்கக் கடத்தலுக்கு எதிரான ஒரு பெரிய நடவடிக்கையாக , வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI), கொல்கத்தா மற்றும் அகர்தலாவில் ஒருங்கிணைந்த செயல்பாடுகளை மேற்கொண்டு, சுமார் 17 கிலோ வெளிநாட்டுத் தங்கத்தைப் பறிமுதல் செய்தது. இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ. 25 கோடி ஆகும். மேலும், இந்த வழக்கு தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
12.06.26 அன்று கொல்கத்தாவில், தாய்லாந்திலிருந்து 11.6 கிலோ தங்கத்தை கொல்கத்தா விமான நிலையம் வழியாகக் கடத்த முயன்ற ஒரு கடத்தல் கும்பலை புலனாய்வுத் துறை (DRI) முறியடித்தது . இந்த வழக்கில் ஒரு பெண் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பிடப்பட்ட மதிப்பு சுமார் ரூ. 17 கோடி ஆகும்.
அதே நாளில் அகர்தலாவில், இந்திய-பங்களாதேஷ் எல்லையின் திரிபுரா பகுதி வழியாகக் கடத்தப்பட்ட , ஏறத்தாழ 8 கோடி ரூபாய் மதிப்புள்ள , சுமார் 5.1 கிலோ வெளிநாட்டுத் தங்கத்தை டி.ஆர்.ஐ. பறிமுதல் செய்தது. இந்த வழக்கு தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கை ரயில்வே பாதுகாப்புப் படையுடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட்டது.
