தமிழக வெற்றிக் கழகத்தை பொருத்தவரை கட்சி நிர்வாகிகள் நியமனம், தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் குறித்த வேட்பாளர்கள் தேர்வு மற்றும் அறிவிப்புப் போன்ற முக்கிய விவகாரங்களில் முடிவெடுக்கும் ஒட்டுமொத்த அதிகாரமும் தவெக தலைவர் விஜய் வசம் மட்டுமே உள்ளது. இன்னும் வெளிப்படையாக விஜய் வாய்மொழி வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் கட்சி மற்றும் ஆட்சி நிர்வாகத்தில் அவர் ஒருவர் மட்டுமே பவர் சென்டர்.
உண்மை நிலைமை இவ்வாறு இருக்க, திருச்சி கிழக்கு இடைத்தேர்தல் தவெக வேட்பாளர் குறித்து கடந்த 30 நாட்களுக்கு மேலாக சுமார் 15-க்கும் மேற்பட்ட நபர்களின் பெயர்களை முன்னிறுத்தி சமூக ஊடகங்களில் திட்டமிட்டே அவரவர் ஆதரவாளர்கள் மூலம் பல லட்சங்களை செலவழித்து செய்திகளைப் பரப்பி; அதை உண்மை என்று தவெக. தொண்டர்களையும், அப்பாவிப் பொது மக்களையும் நம்ப வைக்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதை உண்மை என்று நம்பி தவெக தொண்டர்கள் இதுப்போன்ற வதந்திகளை சமூக ஊடகங்களில் தொடர்ந்துப் பகிர்ந்து வருகிறார்கள். இதில் உச்சபட்ச கொடுமை என்னவென்றால் தவெக தலைமைக் கழக அதிகாரப்பூர்வ அறிவிப்பு போலவே நூற்றுக்கணக்கானப் போலி சமூக ஊடகக் கணக்குகளை உருவாக்கி வதந்திகளை செய்திகளாக்கி வருகின்றனர்.
கடந்த இரண்டு வாரக் காலமாக நடிகர் ராகவா லாரன்ஸ்தான் திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தவெகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் என்றே உறுதிப்படுத்தி வருகிறார்கள்.
நடிகர் ராகவா லாரன்ஸ் அரசியலுக்கு வருவதை இங்கு யாரும் தடுக்கவில்லை. ஜனநாயக நாட்டில் யாரு வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்! யார் வேண்டுமானாலும் கட்சித் தொடங்கலாம்! அது அவர் அவருடைய அடிப்படை உரிமை; இதில் யாரும் தலையிட முடியாது. ஒருவேளை தவெக தலைவர் விஜய் தலைமையை ஏற்று கொண்டால், அதை தவெக தலைமையும் அங்கீகரிக்குமானால் மற்றவர்களைப் போல நடிகர் ராகவா லாரன்ஸ்க்கும் தவெகவில் கௌரவமான பொறுப்பும் அங்கீகாரமும் நிச்சயம் வழங்குவார்கள்.
ஆனால் தவெகவில் உறுப்பினராக சேர்வதற்கு முன்பாகவே திருச்சி கிழக்கு தொகுதியின் வேட்பாளர் நான்தான் என்று பிரகடனம் படுத்திக்கொள்வது; அதுபோன்றப் பிரசாரத்தை முன்னெடுப்பது அடிப்படை ஒழுங்கு அல்ல. இப்படி செய்வது அரசியல் அறமும் ஆகாது! ஆரோக்கியமான அரசியல் நடைமுறையாகவும் இதை கருத இயலாது. ஆரம்பமே சரியாகப்படவில்லை.
ஆர்வக்கோளாறில் அவரது ரசிகர்களும், ஆதரவாளர்களும் இப்படி ஒரு பிரசாரத்தை முன்னெடுப்பதை தொடக்கத்திலேயே நடிகர் ராகவா லாரன்ஸ் தடுத்திருக்க வேண்டும். அதை இந்த நிமிடம் வரை அவர் செய்யவில்லை. அதை ஊக்கப்படுத்தும் வகையில் தான் இன்று அவரது வீடியோப் பதிவும் இருக்கிறது.
இது தவெக தலைவர் விஜயை களங்கப்படுத்தும் முயற்சியாகும். அவரது அதிகாரத்தில் தலையிடும் உரிமை யாருக்கும் இல்லை என்கிற போது, இது நடிகர் ராகவா லாரன்ஸ்க்கும் பொருந்தும்.
விஜய் தலைமையிலான தவெக கட்சிக்கும், ஆட்சிக்கும் களங்கத்தை ஏற்படுத்த வேண்டும். எப்படியாவது இந்த ஆட்சியை தொடரவிடாமல் சதி செய்து கவிழ்க்க வேண்டும் என்ற முயற்சியில் ஒரு பெருங்கூட்டமே களத்தில் இறங்கிச் செயல்பட்டு வருகிறது. அரசியலுக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத முதுகெலும்பு இல்லாத ஒரு மூத்த நடிகர் இந்த முயற்சியில் மும்முரமாக செயல்பட்டு வருகிறார். இதற்கு அவரது பினாமிகளும், கைத்தடிகளும் களமிறங்கியுள்ளனர்.
தவெக கட்சி மற்றும் ஆட்சி நிர்வாகத்தில் விஜய் ஒருவர் மட்டுமே பவர் சென்டர்! முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு மட்டுமே உள்ளது! சமூக ஊடகங்களில் திட்டமிட்டு பரப்பப்படும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்! எனவே, தவெக தொண்டர்களும், நிர்வாகிகளும் மிகவும் விழிப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருப்பது நல்லது.
–Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA TEAM
