தமிழக அரசு – இன்று ஜூன் 12 – மேட்டூர் அணையை திறக்காததால் டெல்டா விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தமிழக அரசு – கர்நாடக அரசிடம் பேசி காவிரி நீரைப் பெறவும், மும்முனை மின்சாரத்தை மின் தடை ஏற்படாமல் வழங்கவும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
============ #அறிக்கை. ==========
ஜூன் 12 ஆம் தேதி வழக்கம் போல் மேட்டூர் அணை திறக்கப்பட்டால் விவசாயிகள் பயனடைவார்கள்.
இந்த வருடம் இன்று ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படாது என்பதால் டெல்டா விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
காரணம் ஜூன் 12 அன்று மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டால் தான் தண்ணீர் தட்டுப்பாடில்லாமல் குறுவை சாகுபடியை செய்ய முடியும். இல்லையென்றால் குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும்.
குறிப்பாக மேட்டூர் அணையின் நீரை நம்பித்தான் நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை போன்ற மாவட்டங்களில் உள்ள பாசன நிலங்களில் பயிரிட்டு சாகுபடி செய்ய முடியும்.
ஆனால் தற்போது மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்கப்படாத சூழலில் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற முடியாமல் குறுவை சாகுபடி பெரிதளவு பாதிக்கப்பட்டு, நெல் விளைச்சல் பெருமளவு குறையும். மேலும் நீண்ட கால பயிர்களை விளைவிக்கும் சம்பா சாகுபடிக்கும் மேட்டூர் அணையின் காவிரி நீர் தேவை.
மேட்டூர் அணை திறக்கப்படாத சூழலில் லட்சக்கணக்கான ஏக்கர் பாசனத்திற்கு நிலத்தடி நீரை அதிகம் பயன்படுத்த நேரிட்டால் நிலத்தடி நீர்மட்ட சரிவும் ஏற்படும்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எஸ்.திவ்யா
