ஒருங்கிணைந்த பழங்குடியின மேம்பாட்டு முகமைகள், திட்டங்களை வலுப்படுத்துவது குறித்த தேசிய மாநாட்டை குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார்.

ஒருங்கிணைந்த பழங்குடியின மேம்பாட்டு முகமைகள், ஒருங்கிணைந்த பழங்குடியின மேம்பாட்டுத் திட்டங்களை வலுப்படுத்துவது குறித்த தேசிய மாநாட்டை, குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (ஜூன் 3, 2026) புதுதில்லியில் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தின் நானோ அறிவியல் மற்றும் பொறியியல் மையத்தில் அமைந்துள்ள ‘பயிற்சி ஆய்வகத்தையும்’, ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள 75 ‘விண்வெளி ஆய்வகங்களையும்’ குடியரசுத்தலைவர் காணொளி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.

பின்னர் உரையாற்றிய குடியரசுத் தலைவர், இந்த மாநாடு பழங்குடியின சமூகத்தில் மாற்றத்தை உருவாக்கும் முகவர்களின் மாநாடு என்று குறிப்பிட்டார். பழங்குடியின சமூகங்களுக்கான நலன், மேம்பாட்டுத் திட்டங்களை நேரடியாக பழங்குடியினர் வசிக்கும் கிராமங்களுக்கு கொண்டு சேர்க்கும் பொறுப்பு இத்திட்டத்தில் பங்கேற்கும் அனைவரையும் சார்ந்துள்ளது என்று அவர் கூறினார். இது, பழங்குடியின மக்களின் வாழ்வில், வலுவான மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றார். மாநில மற்றும் திட்ட அளவில் பணியாற்றும் அனைவரும், ஒரு பொதுவான, பரந்த நோக்குடன் ஒன்றிணைந்து செயல்படும்போது, ஏராளமான ஆக்கபூர்வமான தீர்வுகள் நிச்சயம் உருவாகும் என்றும் அவர் தெரிவித்தார். பழங்குடியின மேம்பாட்டின் முக்கிய பரிமாணங்கள் குறித்த விவாதங்கள், இந்த மாநாட்டில் இடம்பெறுவது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். பல்வேறு முகமைகள் மற்றும் ஆகியவற்றில் பணியாற்றும் பணியாளர்கள், நன்கு சிந்தித்து எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், தங்கள் பணிகளை முன்னெடுத்துச் செல்வார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். இதன் மூலம், பல்வேறு திட்டங்களின் பயன்கள், பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த ஒவ்வொரு தனிநபருக்கும் சென்றடைவது உறுதி செய்யப்படும் என்று குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு கூறினார்.

Leave a Reply