இளையோர் சங்கமம் ஆறாம் கட்டத்தின் ஒரு பகுதியாக குஜராத் மாணவர் பிரதிநிதிகளுடன் ஒடிசா ஆளுநர் டாக்டர் ஹரி பாபு கம்பம்பட்டி 2026 மே 27 அன்று உரையாடினார்.
அகமதாபாதில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தின் மாணவர் பிரதிநிதிகள் 2026 மே 22 அன்று ஒடிசாவில் தங்களது கல்வி, கலாச்சாரப்பரிமாற்றப் பயணத்தைத் தொடங்கினார்கள். 2026 மே 25 அன்று ரூர்கேலாவில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகம், குஜராத் மாணவர்களை அன்புடன் வரவேற்றது.
மாணவர்களுடனான உரையாடலின் போது நாட்டைக் கட்டமைத்தல், கலாச்சாரப் புரிந்துணர்வு, தேசிய ஒருங்கிணைப்பு உணர்வை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் இளையோரின் பங்களிப்பை ஆளுநர் எடுத்துரைத்தார்.
தலைமைத்துவம், பொறுப்புணர்வு, கலாச்சாரப் பரிமாற்றம் மூலம் ஒற்றுமையை வளர்ப்பதன் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். இப்பயணத்தின் போது ஒடிசாவின் வளமான கலாச்சாரக் கல்வி சூழலை குஜராத் மாணவர்கள் கண்டறிந்தனர். கோனார்க் சூரியக் கோவில், மா சமலேஸ்வரி கோவில் போன்ற தனித்துவமிக்க இடங்களையும் மாணவர்கள் பார்வையிட்டனர்.
திவாஹர்
