தமிழக முதல்வர் மற்றும் மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல் ஆகியோர் முன்னிலையில் ஜல் ஜீவன் மிஷன் 2.0 செயல்படுத்துவதற்காக தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய் இன்று (ஜூன் 2) சென்னை, தலைமைச் செயலகத்திலிருந்தும், ஒன்றிய அரசின் ஜல் சக்தித் துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் புது டெல்லியிலிருந்தும் காணொலிக் காட்சி வாயிலாகக் கலந்துகொண்ட கூட்டத்தில், அவர்கள் முன்னிலையில் உயிர் நீர் இயக்கம் (ஜல் ஜீவன் மிஷன்) 2.0 திட்டத்தின் நீட்டிக்கப்பட்ட செயலாக்கக் காலத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
கே.பி.சுகுமார்
