பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியின் 134-வது அத்தியாயத்தில் தாம் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவுகள் வாயிலாக, திரு. மோடி பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
“குரிந்தர்வீர் சிங் மற்றும் அனிமேஷ் குஜூர் ஆகியோருடனான உரையாடல் மிகவும் சிறப்பான ஒன்றாக அமைந்தது; இந்திய தடகள விளையாட்டின் எதிர்காலம் மிகவும் பிரகாசமாக உள்ளது என்பதைப் பற்றிய ஒரு முன்னோட்டத்தை இது வழங்குகிறது!
“இந்தியாவின் மாம்பழங்களும், அதன் பல்வேறு வகையான ரகங்களும் நிச்சயமாக ஒரு சிறப்புக்குரிய இடத்தைப் பெறுகின்றன! உங்களுக்குப் பிடித்த மாம்பழ ரகம் எது?
“கோடை வெப்பத்தைத் தணிக்க நீச்சலடிப்பது ஒரு சிறந்த வழியாகும். மனதின் குரல் நிகழ்ச்சியின்போது, கேரளத்தைச் சேர்ந்த சஜி, எதிர்கால நீச்சல் வீரர்களுக்குப் பயிற்சி அளிப்பதில் மேற்கொண்டு வரும் முயற்சிகளை நான் சிறப்பித்துக் கூறினேன்!
“இந்தியா முழுவதும், வானியல் அறிவை இளைஞர்களிடையே பிரபலப்படுத்தும் வகையில் எண்ணற்ற மன்றங்களும் அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன. இத்தகைய ஒவ்வொரு முயற்சி குறித்தும் நான் பெருமை கொள்கிறேன்.
“உத்தரப்பிரதேசத்தில் செயல்பட்டு வரும் ‘டால்பின் மீட்பு ஆம்புலன்ஸ்’ சேவை, மிகவும் பாராட்டத்தக்க வகையில் பணியாற்றி வருகிறது; மேலும், நாம் வாழும் இந்தப் பூமியைப் பகிர்ந்துகொள்ளும் பிற உயிரினங்களையும் நாம் எவ்வாறு பேணிப் பாதுகாக்க வேண்டும் என்ற ஒரு முக்கிய செய்தியையும் அது உணர்த்துகிறது.
“உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆகாஷ் குப்தா மற்றும் கோவாவைச் சேர்ந்த பாலகிருஷ்ணா ஐயா போன்றோர் நீர் பாதுகாப்புப் பணிகளில் முன்னின்று செயல்பட்டு வருகின்றனர்; இதன் மூலம், நிலையான வளர்ச்சி குறித்த ஒரு மிக முக்கியமான செய்தியை அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
“தமிழகத்தைச் சேர்ந்த கிரிஜா அம்மா அவர்களை நான் சந்தித்த நிகழ்வை நினைவுகூர்ந்தேன்; தேசத்தைக் கட்டமைக்கும் பணியில் அவர் கொண்டுள்ள ஈடுஇணையற்ற ஆர்வத்தை நான் சிறப்பித்துக் கூறினேன். மேலும், கல்வித் துறையில் ஆற்றி வரும் சிறப்பான பணிகளுக்காக ‘ஜெய் கோபால் கரோடியா இந்து வித்யாலயா’ பள்ளிகளையும் நான் பாராட்டினேன்.
“நான் நெதர்லாந்து நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டதிலிருந்து, இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்ட ‘சோழர் காலச் செப்பேடுகள்’ குறித்து மக்களிடையே மிகுந்த ஆர்வம் நிலவி வருகிறது. எனவே, மனதின் குரல் நிகழ்ச்சியின்போது அந்தச் செப்பேடுகள் குறித்து நான் பேசினேன்; அத்துடன், சத்தீஸ்கர் மாநிலத்தில் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட மூன்று அரிய செப்பேடுகள் குறித்த தகவலையும் நான் பகிர்ந்துகொண்டேன்.”
திவாஹர்
