இந்திய விமானப்படையின் கஜ்ராஜ் என்ற ஐஎல்-76 ரக சிறப்புப் போக்குவரத்து விமானம், புத்தரின் புனிதப் பொருட்களை நேற்று (2026 மே 30) புதுதில்லியிலிருந்து மங்கோலியாவிற்குக் கொண்டு சென்றது. அந்த விமானம் இரவு முழுவதும் பயணம் செய்து, இந்திய நேரப்படி காலை 11:25 மணிக்கு மங்கோலியாவில் தரையிறங்கியது.
நட்பு நாடுகளுடன் கலாச்சார உறவுகளை வலுப்படுத்தும் இந்தியாவின் முயற்சிகளின் ஒரு பகுதியாக, இந்திய விமானப்படை இந்தப் பணியை மேற்கொண்டது.
இந்த நடவடிக்கை, தேசிய நோக்கங்களுக்கு ஆதரவளிப்பதற்கும் இந்தியாவின் உலகளாவிய கலாச்சாரப் பரவல் முயற்சிகளுக்குப் பங்களிப்பதற்கும் இந்திய விமானப்படையின் பங்களிப்பையும் திறனையும் பிரதிபலிக்கிறது.
எம்.பிரபாகரன்
