கர்நாடக மாநில அரசியலில் அதிரடி மாற்றம்! ஜூன் 3 ந்தேதி முதலமைச்சராக பதவியேற்கும் D.K. சிவகுமார்! -அதிகாரப்பூர்வ தகவல்.

கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், பெங்களூருவில் முதலமைச்சர் சித்தராமையாவின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டு,அமைச்சரவையை உடனடியாகக் கலைத்தார்.மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை, இந்தக் காலகட்டத்தில் நிர்வாக முடிவுகள் எதையும் எடுக்காமல், தற்காலிக முதலமைச்சராகப் பொறுப்பேற்குமாறு அவர் சித்தராமைய்யாவை கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக துணை முதலமைச்சர் D.K. சிவகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, ஆட்சி அமைப்பதற்கு ஆளுநரிடம் D.K. சிவகுமார் உரிமைக் கோரினார். இந்நிலையில் ஜூன் 3 அன்று கர்நாடக முதலமைச்சராகப் பதவியேற்குமாறு டி.கே. சிவகுமாருக்கு கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அழைப்பு விடுத்துள்ளார். இது நாள் வரை கர்நாடக மாநிலத்தின் துணை முதலமைச்சராக இருந்த D.K. சிவகுமார், ஜூன் 3ஆம் தேதி கர்நாடக மாநில முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார்.

இதற்கிடையில் காங்கிரஸ் கமிட்டியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை D.K.சிவகுமார் நேரில் சந்தித்து வாழ்த்தும் பெற்றுள்ளார்.

எது எப்படியோ மேகதாது அணை மற்றும் காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்பட்டு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு D.K. சிவகுமார் தனது முதலமைச்சர் பதவியைத் தொடர வேண்டும். இந்த விசயத்தில் நேர்மையாக நடந்து கொள்ளும்படி D.K. சிவகுமாருக்கு, பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டிப்பான உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும். .

Leave a Reply