குடியரசு துணைத்தலைவர் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள், இன்று (29.05.2026) கர்நாடகாவின் தாவணகெரேயில் உள்ள பிடிடி பொறியியல் பல்கலைக்கழகக் கல்லூரியின் பவள விழா கொண்டாட்டங்களில் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், தொழில்நுட்பத்தில் தற்சார்பு பெற்ற, வளர்ந்த நாடாக உருவெடுக்கும் இந்தியாவின் பயணத்தில் இளைஞர்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.
தொழில்நுட்பம், புதுமை ஆகியவற்றுடன் இளைஞர்களின் மகத்தான வலிமையால் புதிய சகாப்தத்தை இந்தியா கண்டுவருகிறது என்று அவர் குறிப்பிட்டார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக் கொண்ட தலைமைத்துவத்தால், டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா, ஸ்டார்ட்அப் இந்தியா, திறன் இந்தியா, குறைக்கடத்தி உற்பத்தி, பசுமை எரிசக்தி, போன்ற முன்முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இவை இளம் பொறியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், புதுமைப் படைப்பாளர்கள், தொழில்முனைவோர் ஆகியோருக்கு முன்னெப்போதும் இல்லாத வாய்ப்புகளை உருவாக்குகின்றன என்று அவர் தெரிவித்தார்.
2047-ம் ஆண்டுக்குள் இந்தியா ஒரு வளர்ச்சியடைந்த நாடாக மாறுவதற்கான லட்சியம், பொறியாளர்கள், விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்முனைவோர் ஆகியோரின் பங்களிப்புகளைப் பெருமளவில் சார்ந்துள்ளது என்று குடியரசு துணைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.
கர்நாடக ஆளுநர் திரு தாவர் சந்த் கெலாட், மூத்த அதிகாரிகள், பேராசிரியர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
திவாஹர்
