கர்நாடக துணை முதலமைச்சர் அவர்கள் மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று கூறியது கண்டிக்கத்தக்கது!- ஜி.கே.வாசன் அறிக்கை.

கர்நாடக துணை முதலமைச்சர் அவர்கள் மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று தெரிவித்த கருத்து விவசாயிகளிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போல அவரது பேச்சு கண்டிக்கத்தக்கது.

காவிரி தண்ணீர் இல்லை என்றால் டெல்டா பாலைவனம் ஆகிவிடும் என்று தெரிந்தே கர்நாடக காங்கிரஸ் அரசு வீண்பிடிவாதம் பிடிக்கிறது.

ஏற்கனவே விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாத தமிழக அரசால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று தமிழக முதலமைச்சர் அவர்கள் டில்லியில் காங்கிரஸ் தலைவர்களை சந்திக்க இருக்கிறார்.

அப்போது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் வகையில் கர்நாடக காங்கிரஸ் துணை முதல்வர் பேசிய தவறான கருத்து குறித்து எடுத்துக்கூறி மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்பதை வலியுறுத்தி உறுதி செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply