தமிழ்நாடு அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், “தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (26.05.2026) தலைமைச் செயலகத்தில் தமிழ்நாட்டின் கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கை மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு எதிராக மாண்பமை உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பான கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாட்டிலுள்ள கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கை மற்றும் 69 சதவீத இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தமிழ்நாடு சட்டம் 45/1994-க்கு எதிராக மாண்பமை சுப்ரீம்கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்குகள் 27.05.2026 அன்று விசாரணைக்கு வர உள்ளன.
இந்நிலையில், நடைமுறையிலுள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டினை பாதுகாக்கும் நோக்கில், நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுரைகளை வழங்கினார்கள்.
கே.பி.சுகுமார்
