சட்டவிரோத ஊடுருவல், பிற காரணங்களால் ஏற்படும் இயல்புக்கு மாறான மக்கள் தொகையில் ஏற்படும் மாற்றங்கள், எந்தவொரு நாட்டிற்கும் மிகப்பெரிய சவாலாக அமைகின்றன: உள்துறை அமைச்சர் அமித் ஷா.

சட்டவிரோத குடியேற்றம், பிற இயல்புக்கு மாறான காரணங்களால் ஏற்படும் மக்கள் தொகை மாற்றங்களை ஆய்வு செய்யவும், அவற்றைக் கையாள்வதற்கான வழிமுறைகளைப் பரிந்துரைக்கவும் மத்திய அரசு உயர்மட்டக் குழு ஒன்றை அமைத்துள்ளது. பிரதமர் திரு நரேந்திர மோடி, 2025 ஆகஸ்ட் 15 சுதந்திரத் தினத்தன்று, “உயர் அதிகாரம் கொண்ட மக்கள் தொகையியல் இயக்கம்” குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இந்த முன்மொழிவிற்கு, மத்திய அமைச்சரவை 2025 செப்டம்பர் 11 அன்று ஒப்புதல் அளித்தது.

ஓய்வுபெற்ற நீதிபதி பிரகாஷ் பிரபாகர் நாவ்லேகர் தலைமையிலான இக்குழுவில், மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையரைத் தவிர, மூன்று சிறந்த நிபுணர்களான திரு. துர்கா சங்கர் மிஸ்ரா (ஓய்வுபெற்ற ஐஏஎஸ்), திரு. பாலாஜி ஸ்ரீவஸ்தவா (ஓய்வுபெற்ற ஐபிஎஸ்), டாக்டர் ஷமிகா ரவி ஆகியோர் உறுப்பினர்களாக செயல்படுவார்கள். மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் (வெளிநாட்டினர்-I) இக்குழுவின் உறுப்பினர் செயலாளராகப் பொறுப்பு வகிப்பார். இக்குழு தனது அறிக்கையை ஓராண்டு காலத்திற்குள் சமர்ப்பிக்கும். தேவைப்படும் பட்சத்தில், இக்குழுவின் பதவிக்காலத்தை உள்துறை அமைச்சகம் ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கலாம். மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. அமித் ஷா, வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “சட்டவிரோத ஊடுருவல், பிற காரணங்களால் ஏற்படும் இயல்புக்கு மாறான மக்கள் தொகையியல் மாற்றங்கள், எந்தவொரு நாட்டின் நிகழ்காலத்திற்கும், எதிர்காலத்திற்கும், மிகப்பரிய சவாலாக அமைகின்றன என்று குறிப்பிட்டுள்ளார். இத்தகைய சவாலை எதிர்கொள்ளும் வகையில், ‘மக்கள் தொகையியல் மாற்றங்கள் குறித்த உயர்நிலைக் குழுவை’ அமைப்பதாகப் பிரதமர் திரு. நரேந்திர மோடி 2025 ஆகஸ்ட் 15 அன்று அறிவித்திருந்ததை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மத்திய அரசு தற்போது இக்குழுவை அமைத்துள்ளது என்பதைத் தெரிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைவதாகக் கூறியுள்ளார். ஓய்வுபெற்ற நீதிபதி பிரகாஷ் பிரபாகர் நாவ்லேகர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இக்குழுவில், மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையருடன் இணைந்து, திரு. துர்கா சங்கர் மிஸ்ரா (ஓய்வுபெற்ற ஐஏஎஸ்), திரு. பாலாஜி ஸ்ரீவஸ்தவா (ஓய்வுபெற்ற ஐபிஎஸ்), டாக்டர் ஷமிகா ரவி ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெறுவர். மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் (வெளிநாட்டினர்-I) இக்குழுவின் உறுப்பினர் செயலாளராகச் செயல்படுவார். மக்கள் தொகையியல் மாற்றங்கள் என்பவை நமது இறையாண்மைக்கு மட்டுமின்றி, தேசியப் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு, சமூகக் கட்டமைப்பில் ஏற்படும் முக்கிய மாற்றங்கள், பழங்குடியினச் சமூகங்களின் பாதுகாப்பு ஆகியவற்றுடனும் தொடர்புடைய ஒரு முக்கியப் பிரச்சினையாகும். சட்டவிரோதக் குடியேற்றம், பிற இயல்புக்கு மாறான காரணங்களால், நாடு முழுவதும் ஏற்பட்டு வரும் மக்கள் தொகையியல் மாற்றங்கள் குறித்து, இக்குழு ஒரு விரிவான மதிப்பீட்டை மேற்கொள்ளும். மத, சமூகங்களின் அடிப்படையில் ஏற்படும் இயல்புக்கு மாறான மக்கள் தொகை மாற்றங்களின் நிலை குறித்து இக்குழு ஆய்வு செய்வதுடன், இதற்குத் தீர்வு காண்பதற்கான நன்கு திட்டமிடப்பட்ட, காலவரையறைக்கு உட்பட்ட பரிந்துரைகளையும் அளிக்கும்.

Leave a Reply