தமிழக அரசு – ஜூன் 12 ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்!-ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

      ஜூன் 12 ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாய சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

     டெல்டா விவசாயிகளின் முக்கிய நீர் ஆதாரமாக மேட்டூர் அணையின் தண்ணீர் விளங்குகிறது.

ஜூன் – ஜூலை மாதங்களில் தொடங்கும் குறுவை சாகுபடி செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் நிறைவு பெறுவதற்கு தென்மேற்கு பருவமழை மற்றும் மேட்டூர் அணையின் தண்ணீர் மிகவும் அவசியமானது.

டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பல லட்சக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்படும் குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையின் தண்ணீர் தேவைப்படுகிறது.

தற்போது தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என வானிலை ஆய்வு மையத் தகவல் தெரிவிக்கின்றது.

தென்மேற்கு பருவமழை பெய்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இச்சூழலில் வருகின்ற ஜூன் 12 ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என்பது தான் விவசாயிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

அந்த வகையில் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12 ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டால் தான் குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகள் பாதுகாக்கப்படுவார்கள்.

டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்கும், பொது மக்களின் குடிநீருக்கும் மேட்டூர் அணையின் தண்ணீர் மிகவும் இன்றியமையாதது என்பதை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேட்டூர் அணையின் காவிரி நீரை நம்பித்தான் விவசாயிகள் விவசாயம் செய்கின்றனர். அப்படி இருக்கும் போது தண்ணீருக்காக காத்திருக்கும் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் தண்ணீரை திறந்து விட வேண்டியது தமிழக அரசின் வழக்கமான ஒன்று.

தமிழக அரசு நெற்பயிர்களை காப்பாற்றுவதற்கும், விவசாயத்தைப் பாதுகாப்பதற்கும், விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கும் ஏதுவாக வருகின்ற ஜூன் 12 ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் கோரிக்கை வைக்கின்றேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply