உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் தேசிய பேரிடர் மீட்புப்படையின் குடியரசுத்தலைவர் பதக்கம் வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று (14.05.2026) உரையாற்றினார். மத்திய உள்துறை செயலாளர், புலனாய்வு அமைப்பு இயக்குநர், தேசிய பேரிடர் மீட்புப்படை தலைமை இயக்குநர் மற்றும் பல்வேறு இதர பிரதிநிதிகள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய திரு அமித் ஷா, தேசிய பேரிடர் மீட்புப்படைக்கு குடியரசுத்தலைவர் பதக்கம் வழங்கப்படுவது, அதன் பாராட்டுக்குரிய சேவைகளுக்கான அங்கீகாரம் மட்டுமின்றி, மாநில பேரிடர் மீட்புப்படைகள், பஞ்சாயத்து முதல் மாநில அளவிலான நிர்வாக அமைப்புகள் வரையிலான முழு அரசு எந்திரம், என்சிசி, என்எஸ்எஸ் மற்றும் சேவையில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான பேரிடர் தன்னார்வலர்கள் ஆகியோரின் பங்களிப்புகளுக்கான குடியரசுத்தலைவரின் அங்கீகாரமாகவும் இது உள்ளது என்று கூறினார். சேவை, எப்போதும் பேரிடர் என்ற குறிக்கோளுடன் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் நாட்டின் எந்தப் பகுதிகளிலும் சேவையாற்றுவதாக கூறினார். தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் உள்நாட்டிலோ அல்லது வெளிநாடுகளிலோ, எங்கு சென்றாலும், அங்குள்ள மக்களின் அன்பையும் நம்பிக்கையையும் பெற்றுள்ளனர் என்று திரு அமித் ஷா குறிப்பிட்டார். நாட்டின் எந்தப் பகுதியிலும் பேரிடர் ஏற்படும்போதோ அல்லது ஏற்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும்போதோ, தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் அங்கு செல்லும்போது, மீட்புப் பணிகள் நிச்சயம் வெற்றிபெறும் என்று நம்பிக்கையுடன் மக்கள் திருப்தி அடைவதாக தெரிவித்தார். தேசிய பேரிடர் மீட்புப் படை தொடங்கப்பட்டது முதல் கடந்த 20 ஆண்டுகளில், நாடு முழுவதும் ஏற்பட்ட வெள்ளம், நிலநடுக்கம், புயல் மற்றும் பிற பேரிடர்களின்போது மேற்கொண்ட வெற்றிகரமான மீட்புப் பணிகளின் மூலம், 140 கோடி குடிமக்களின் நம்பிக்கையை அது பெற்றுள்ளதாக திரு அமித் ஷா தெரிவித்தார்.
திவாஹர்
