சைபர் க்ரைம் பிரிவு டிஜிபியாக பால நாகதேவி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், சில ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக கூடுதல் தலைமைச் செயலர் கே.மணிவாசன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, உளவுப் பிரிவு டிஜிபியாக உள்ள பால நாகதேவி தற்போது சைபர் க்ரைம் பிரிவு டிஜிபியாக நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரக் குற்றப் பிரிவு டிஜிபியாக இருந்த பால நாகதேவி, கடந்த மார்ச் மாதம் உளவுப் பிரிவு டிஜிபியாக நியமிக்கப்பட்டார். உள்துறைச் செயலராக இருந்த தீரஜ்குமார் இதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இரண்டு மாதங்களில் பால நாகதேவியின் பொறுப்பு தற்போது மாற்றப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
கே.பி.சுகுமார்
