உத்திசார்ந்த சுயாட்சி மற்றும் எதிர்கால தயார்நிலை படைகளுக்கு தற்சார்பு மற்றும் கூட்டு செயல்பாடு அவசியம்!-பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.

நாட்டின் வலிமை அதன் பாதுகாப்புப் படைகள், ஆய்வகங்கள் மற்றும் தொழில்துறைகள் எவ்வாறு விரைந்து ஒருங்கிணைந்து சிந்தித்துச் செயல்படுகின்றன என்பதை பொறுத்தே அமையும் என்று பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கூறினார். மேலும், உத்திசார்ந்த சுயாட்சியைப் பாதுகாப்பதற்கும், வளர்ந்து வரும் பாதுகாப்புச் சவால்களுக்கு எதிர்காலத்தில் தயாராக இருப்பதற்கும் தற்சார்பு மற்றும் கூட்டுச் செயல்பாட்டின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

புதுதில்லியில் உள்ள மானேக்ஷா மையத்தில் 2026 மே 14 அன்று நடைபெற்ற கலம் மற்றும் கவச் 3.0 என்ற பாதுகாப்பு உத்திசார்  கலந்துரையாடலின் போது, அவர் இதனைத் தெரிவித்தார். கொள்கை வகுப்பாளர்கள், ராணுவத் தலைவர்கள், பாதுகாப்புத் தளவாட தொழில்துறை பங்குதாரர்கள், தூதர்கள், புதுமைக் கண்டுபிடிப்பாளர்கள், புத்தொழில் நிறுவனங்கள், கல்வியாளர்கள் மற்றும் உத்திசார் நிபுணர்களிடம் அவர் காணொளி வாயிலாக உரையாற்றினார்.

சிந்தனை மற்றும் செயல்பாடுக்கு இடையே குறைவான நேரத்தில் செயல்படுவது நாளைய போர்களத்திற்கு பயனளிக்கும் என்று பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார். தற்போதைய புவிசார் அரசியல் பதற்றங்கள், தற்போதைய மோதல்கள், இணையவழி அச்சுறுத்தல்கள், விநியோகச் சங்கிலி பாதிப்புகள், புதிய வகையான போர் முறைகள் ஆகியவற்றில் நாட்டின் பாதுகாப்பு பழைய அம்சங்களை சார்ந்திருக்க முடியாது என்று அவர் கூறினார். நாட்டின் பாதுகாப்புக்கு நமது தயார்நிலை, மீள்திறன், புதுமைக் கண்டுபிடிப்பு, உத்திசார்ந்த நம்பிக்கை ஆகியவை தேவை என்று அவர் தெரிவித்தார்.

தற்சார்பு என்பது பொருளாதார இலக்கு மட்டுமின்றி, அது உத்திசார்ந்த அவசியம் என்று குறிப்பிட்ட திரு ராஜ்நாத் சிங், முக்கியமான தற்காப்புத் திறன்களுக்காக மற்றவர்களை அதிக அளவில் சார்ந்திருக்கும் ஒரு நாடு, நெருக்கடி தருணங்களில் எளிதில் பாதிக்கப்படக்கூடிய சூழலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று குறிப்பிட்டார்.

புதிய இந்தியாவின் திறன்களை வடிவமைக்கும் உதாரணமாக ஆப்ரேஷன் சிந்தூர் திகழ்கிறது என்று திரு ராஜ்நாத் சிங் கூறினார்.

Leave a Reply