தமிழ்நாடு முதலமைச்சராக பதவி ஏற்றுள்ள ச. ஜோசப் விஜய்க்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து.

Tamil Nadu has chosen. A new generation. A new voice. A new imagination. My good wishes to Thiru Vijay – may he fulfil the hopes of the people of Tamil Nadu

*************

புதிதாக பொறுப்பேற்றிருக்கும் தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) , சிபிஐ வாழ்த்து.

முதலமைச்சர் பொறுப்பேற்கும் திரு. சி .ஜோசப் விஜய்க்கும், புதிய அரசுக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்துகள்!

இதுகுறித்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் விடுத்துள்ள செய்தி வருமாறு:

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் மதச்சார்பற்ற, சமூக நீதி திசை வழியில் ஆட்சி அமைய வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்தும் வகையில் தீர்ப்பளித்துள்ளனர்.

இந்த முறையில் தமிழக வெற்றிக் கழகத்தை தனிப் பெரும் கட்சியாக தேர்வு செய்துள்ளனர்.

மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளித்து ஆட்சி அமைக்க அழைக்க வேண்டிய ஆளுநரும், ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகமும், அமைச்சரும் திரைமறைவு வேலைகளில் ஈடுபட்டு, குறுக்கு வழியில் அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டது நாடறிந்த செய்தியாகும்.

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கம்யூனிஸ்டு கட்சிகளும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஒருங்கிணைந்து, மதவாத சக்திகளின் சந்தர்ப்பவாத அரசியலை முறியடித்து தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு தெரிவித்தன.

இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் இணைந்து கொண்டது.

தமிழக மக்களின் மதச்சார்பற்ற, வேற்றுமையில் ஒற்றுமை பேணும் கொள்கை வழியில் நின்று, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும்.

அதிகாரக் குவிப்புக்கு எதிராகவும் மாநில உரிமைகளை நிலைநாட்டும் வகையிலான அரசாகவும் புதிய அரசு செயல்பட வேண்டும் என வாழ்த்துகிறோம்.

புதிய அரசுக்கு தலைமை ஏற்றுள்ள மாண்புமிகு முதலமைச்சர்
திரு சி .ஜோசப் விஜய் அவர்களின் சீரிய தலைமை , அதன் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும், முந்தைய அரசின் நலத் திட்டங்களை முன்னெடுத்து செல்வதிலும் வெற்றி பெற வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

*******************

இன்று காலை 10.00 மணியளவில் தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவி ஏற்கும் தவெக தலைவர் ச. ஜோசப் விஜய்க்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது மனமார்ந்த வாழ்த்துகள்.

இவ்வாறு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

****************

புதிய முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும் பாமகவின் வாழ்த்துகள்: சமூகநீதி, நல்லாட்சிப் பாதையில் புதிய அரசு நடை போடட்டும்!தமிழ்நாட்டின் 12-ஆம் முதலமைச்சராக த.வெ.க. தலைவர் விஜய் அவர்களும், அவருடன் 9 பேர் கொண்ட அமைச்சரவையும் இன்று பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறது. புதிய முதலமைச்சருக்கும், அவரது அமைச்சரவை சகாக்களுக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்திருப்பது எந்தக் கட்சியாக இருந்தாலும், ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுத்த மக்களின் நோக்கமும், எதிர்பார்ப்பும் ஒன்று தான். எந்த வகையான போதையும் இல்லாத, பெண்களும், குழந்தைகளும் பாதுகாப்பாகவும், நிம்மதியாகவும் வாழக்கூடிய, இளைஞர்களுக்கு தரமான கல்வியும், வேலைவாய்ப்பும் வழங்கக்கூடிய, உழவர்களின் வருமானத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தக் கூடிய, அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தக் கூடிய, அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கூடிய, இவை அனைத்துக்கும் மேலாக சமூகநீதியை பாதுகாக்கக் கூடிய அரசு அமைய வேண்டும் என்பது தான் அது. இந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற புதிய அரசு தீவிரமாக முயல வேண்டும்.த.வெ.கவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முதல் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான ஆணையில் புதிய முதலமைச்சர் முதல் கையெழுத்திட வேண்டும்; மற்ற வாக்குறுதிகளையும் விரைந்து நிறைவேற்ற வேண்டும். மக்கள் நலன் காப்பதற்கான விஜய் அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பாட்டாளி மக்கள் கட்சி அதன் முழு ஆதரவை அளிக்கும்; அரசின் தவறுகளை சுட்டிக்காட்டுவதிலும், அந்தத் தவறை திருத்தச் செய்வதிலும் பொறுப்புள்ள, ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக பா.ம.க. செயல்படும்.

இவ்வாறு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

***********

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் த.வெ.க வின் தலைவர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு நல்வாழ்த்துகள்.

தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) கட்சியின் சார்பிலே நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் பெருந்தலைவர் காமராஜர், மக்கள் தலைவர் மூப்பனார் ஆகியோரது தாரக மந்திரமான வளமான தமிழகம் வலிமையான பாரதம் ஆகியவற்றிற்கு ஏற்ப ஆட்சி நடைபெற தங்களின் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

***********

தமிழக முதலமைச்சராக இன்று பொறுப்பேற்றிருக்கும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களுக்கும், அமைச்சர்களாகப் பொறுப்பேற்கவிருக்கும் அனைவருக்கும் மற்றும், தவெக தொண்டர்கள் அனைவருக்கும், எனது நல்வாழ்த்துக்கள். தமிழகத்தின் முதல்வராக உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அண்ணாமலை தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

*************

ஒவ்வொரு மாவட்டத்திலும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவை அமைக்க முதல் கையெழுத்திட்ட தமிழக முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள், டாஸ்மாக் கடைகளையும் முழுமையாக மூடுவதற்கும் கையெழுத்திட்டிருந்தால் மிகச் சிறப்பாக இருந்திருக்கும்.அவருடைய அடுத்த உத்தரவு, தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு புதிய தமிழகம் கட்சி தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி வாழ்த்து.

Leave a Reply