‘ஆப்பிரிக்காவிற்கான அணுசக்தி புத்தாக்க உச்சிமாநாட்டில்’ பங்கேற்க வருமாறு அந்நாட்டு அதிபர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதனை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கிடம், இந்தியாவிற்கான ருவாண்டா தூதர் திருமதி ஜாக்குலின் முகாங்கிரா, இன்று நேரில் தெரிவித்தார்.
இந்த உச்சி மாநாடு 2026 மே 18 முதல் 21 வரை ருவாண்டாவின் கிகாலியில் நடைபெறுகிறது.
இருப்பினும், டாக்டர் ஜிதேந்திர சிங், ருவாண்டாவிற்கு நேரில் வர இயலாதது குறித்து வருத்தம் தெரிவித்தார். ஆனால், இந்த உச்சிமாநாட்டில், காணொளி வாயிலாகப் பங்கேற்று, அதற்கென ஒதுக்கப்பட்ட அமர்வில் உரையாற்ற ஒப்புக்கொண்டார்.
ருவாண்டாவின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் துறை அமைச்சர் திரு பவுலா இங்காபிரே உட்பட அந்நாட்டு அரசின் சார்பில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டது. கிகாலி மாநாட்டு மையத்தில் நடைபெறும் டிந்த உச்சி மாநாட்டை, சர்வதேச அணுசக்தி முகமை, ஐக்கிய நாடுகளின் ஆப்பிரிக்கப் பொருளாதார ஆணையம், அணுசக்தி முகமை, உலக அணுசக்தி சங்கம் மற்றும் பிராந்திய நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட முன்னணி சர்வதேச மற்றும் பிராந்திய நிறுவனங்களுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த உச்சிமாநாடு, அணுசக்திப் புத்தாக்கம், செயற்கை நுண்ணறிவு ஒருங்கிணைப்பு, உற்பத்திச் சூழல் அமைப்புகள் மற்றும் ஆப்பிரிக்காவின் எதிர்காலத்திற்கான எரிசக்தி ஒத்துழைப்பு குறித்து விவாதிப்பதற்காக, அமைச்சர்கள், கொள்கை வகுப்பாளர்கள், விஞ்ஞானிகள், புத்தாக்குநர்கள், தொழில்துறைத் தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரை ஒன்றிணைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கலந்துரையாடலின் போது, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புத்தாக்கம், அணுசக்திப் பயன்பாடுகள், டிஜிட்டல் திறன் மேம்பாடு மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் இந்தியா-ருவாண்டா இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிவகைகள் குறித்து இரு தரப்பினரும் விவாதித்தனர். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொழில்நுட்பம் சார்ந்த அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வையால் உந்தப்பட்டு, அணுசக்தி, விண்வெளித் தொழில்நுட்பம், உயிரித் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் நிர்வாகம் உள்ளிட்ட முன்னணித் துறைகளில், இந்தியாவின் வளர்ந்து வரும் உலகளாவிய ஈடுபாட்டை டாக்டர் ஜிதேந்திர சிங் பகிர்ந்துகொண்டார்
திவாஹர்
