மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூருக்கும், காண்ட்வாவுக்கும் இடையேயான பாதை மலைகள் நிறைந்த கடினமான பாதையாகும். பல ஆண்டுகளாக இந்தப் பாதையில் மிகுந்த சிரமத்திற்கு இடையே செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது. அதிகமான வளைவுகள், கடினமான மலைப்பாதைகளில் வாகனங்கள் கவிழ்ந்து விடுமோ என்ற அச்சம் தொடர்ந்து நிலவியது. அச்சத்துடனேயே இப்பாதையில் அப்பகுதி மக்கள் பயணித்து வந்தனர்.
இந்த நிலையில், இந்தூர் – காண்ட்வா இடையேயான போக்குவரத்து இணைப்பை வலுப்படுத்தும் வகையில் இந்தூர் – இச்சாப்பூர் இடையேயான இருவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் முடிவு செய்தது. இதையடுத்து தேசிய நெடுஞ்சாலை 347 பிஜி-யின் 33.4 கிலோமீட்டர் நீளமுள்ள தேஜாதி நகர் பல்வாரா பிரிவு நான்கு வழிச்சாலையாக மாற்றப்படுகிறது.
இதற்கான பணிகள், விரைந்து மேற்கொள்ளப்பட்டு குறுகிய, ஆபத்தான வழித்தடங்கள், அகலப்படுத்தப்பட்டு தேவையான இடங்களில் சுரங்கப்பாதைகளும் அமைக்கப்பட்டுகின்றன. இது 924 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தில் 88 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இத்திட்டத்தின் மூலம் இப்பகுதியில் பாதுகாப்பான பயணம் உறுதி செய்யப்படும். விரைவான மற்றும் பாதுகாப்பான பயணம் இப்பகுதி மக்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என்பதோடு இதன் மூலம் அவர்களது பொருளாதார நிலையும் மேம்படும். அத்துடன் இந்தூர் – ஐதராபாத் இடையேயான போக்குவரத்து இணைப்பும் வலுவடையும்.
திவாஹர்
