பீகார் அரசில் அமைச்சர்களாகப் பதவியேற்ற அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
மாநிலத்தின் முழுமையான வளர்ச்சிக்கான அவர்களின் அர்ப்பணிப்பு, பீகாரை செழிப்பின் புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்லும் என்று தாம் உறுதியாக நம்புவதாக பிரதமர் கூறினார். மேலும், வலிமையான பீகாரையும், வளர்ச்சியடைந்த இந்தியாவையும் கட்டியெழுப்பும் தீர்மானத்தை நனவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
தமது பாட்னா பயணத்தின் போது, பீகார் மக்களிடமிருந்து பெற்ற அன்புக்கும் ஆசிகளுக்கும் பிரதமர் நன்றி தெரிவித்தார்.
தமக்கு அளிக்கப்பட்ட அன்பான வரவேற்பால் தாம் நெகிழ்வுற்றதாக கூறிய அவர், மக்களின் ஆதரவிற்கும் உற்சாகத்திற்கும் நன்றி தெரிவித்தார். மக்களிடையே காணப்பட்ட இந்த முன்னெப்போதும் இல்லாத ஆரவாரம், வளர்ச்சி மற்றும் பொதுச் சேவைக்கான அரசின் அர்ப்பணிப்பிற்கு மக்களின் வலுவான ஆதரவு இருப்பதை பிரதிபலிப்பதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் தனது கருத்துக்களைப் பதிவிட்டுள்ளார்.
திவாஹர்
