ஆந்திரப் பிரதேச துணை முதலமைச்சர் பவன் கல்யாணுடன் பிரதமர் நரேந்திர மோதி தொலைபேசியில் பேச்சு.

பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆந்திரப் பிரதேச துணை முதலமைச்சர் திரு பவன் கல்யாணுடன் தொலைபேசியில் பேசி, அவரது நலம் விசாரித்தார்.

திரு பவன் கல்யாண் அபாரமான தைரியசாலி என்றும், அவர் விரைவில் குணமடைவார் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். திரு மோடி அவரது நல்ல ஆரோக்கியத்திற்காக பிரார்த்தனையும் செய்தார்.

பிரதமர் X-ல் எழுதியதாவது;

“ஆந்திரப் பிரதேச துணை முதலமைச்சர் திரு பவன் கல்யாண் அவர்களுடன் தொலைபேசியில் பேசி, அவரது நலம் விசாரித்தேன். அவர் அபாரமான தைரியசாலி, மேலும் அவர் விரைவில் குணமடைவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அவரது நல்ல ஆரோக்கியத்திற்காக பிரார்த்திக்கிறேன்.

Leave a Reply