புது தில்லியில் நடைபெற்ற பாலகோகுலம் டெல்லி-என்சிஆர் வெள்ளி விழா கொண்டாட்டங்களில் துணை ஜனாதிபதி உரையாற்றினார்.

இந்திய துணை ஜனாதிபதி, ஸ்ரீ சி.பி.ராதாகிருஷ்ணன், இன்று புது தில்லியில் உள்ள ஐஎன்ஏ தியாகராஜ் ஸ்டேடியத்தில் பாலகோகுலம் டில்லி-என்சிஆரின் ரஜத ஜெயந்தி (வெள்ளி விழா) கொண்டாட்டங்களைத் தொடக்கி வைத்து உரையாற்றினார்.

சமகால சவால்கள் குறித்துப் பேசிய துணை ஜனாதிபதி, வேகமாக மாறிவரும் உலகில் குழந்தைகள் எண்ணற்ற கவனச்சிதறல்களையும், விழுமியங்கள் சார்ந்த குழப்பங்களையும் எதிர்கொள்கின்றனர் என்று குறிப்பிட்டார். இச்சூழலில், பாலகோகுலம் போன்ற நிறுவனங்கள் வழிகாட்டும் ஒளிவிளக்குகளாகச் செயல்பட்டு, குழந்தைகளை அவர்களின் வேர்களுடன் இணைப்பதோடு, எதிர்காலத்தை நம்பிக்கையுடனும் தெளிவுடனும் எதிர்கொள்ள அவர்களைத் தயார்படுத்துகின்றன என்று அவர் வலியுறுத்தினார். இந்த அணுகுமுறை, “வளர்ச்சியும், நம்பிக்கையும்” என்ற தேசிய தொலைநோக்குப் பார்வையைப் பிரதிபலிக்கிறது என்றும் அவர் கூறினார்.

நாகரிகப் பெருமிதத்தையும் நவீன இலட்சியங்களையும் சமநிலைப்படுத்துவதன் முக்கியத்துவத்தை துணை ஜனாதிபதி வலியுறுத்தினார். தேசத்தை ஒரு வளமான எதிர்காலத்தை நோக்கி வழிநடத்தக்கூடிய, பொறுப்புள்ள மற்றும் விழுமியங்களால் உந்தப்பட்ட குடிமக்களை வளர்ப்பதே அமிர்த காலம் என்ற கருத்தாக்கத்தின் அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.

குழந்தைகளிடம் உரையாற்றிய அவர், அவர்களை அமைப்பின் பாரம்பரியத்தின் உண்மையான வழிகாட்டிகள் என்று வர்ணித்தார். பெரியோர்களை மதித்தல், கலாச்சாரத்தின் மீது அன்பு, குழுப்பணி மற்றும் சுய ஒழுக்கம் போன்ற நற்பண்புகளை உள்வாங்கிக்கொள்ளுமாறு அவர்களை வலியுறுத்திய அவர், இந்த குணங்கள் அவர்களின் வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு வழிகாட்டும் என்றும் குறிப்பிட்டார்.

அந்த நிகழ்வில், ரஜத ஜெயந்தி கொண்டாட்டங்களின் போது ஒரு புனிதமான காணிக்கையாக ஏற்பாடு செய்யப்படும் கிருஷ்ணார்ப்பணத்தின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார். அதன் ஆழமான பொருளை விளக்கிய அவர், ஒருவரின் எண்ணங்கள், செயல்கள் மற்றும் திறமைகளை ஒரு உயர்ந்த நோக்கத்திற்காக அர்ப்பணிப்பதே பகவான் கிருஷ்ணரின் போதனைகளின் சாராம்சம் என்று கூறினார். பகவான் கிருஷ்ணரின் வாழ்க்கை தர்மத்திற்கும், பொது நன்மைக்கான தன்னலமற்ற செயலுக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று அவர் குறிப்பிட்டார்.

மத்திய மின்சாரம் மற்றும் புதிய & புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை இணை அமைச்சர் திரு ஸ்ரீபத் நாயக்; மத்திய மீன்வளம், கால்நடை வளர்ப்பு, பால்வளம் மற்றும் சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை இணை அமைச்சர் திரு ஜார்ஜ் குரியன்; பாலகோகுலம் டெல்லி-என்சிஆர் தலைவர் திரு பி.கே. சுரேஷ் மற்றும் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Leave a Reply