2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 முதல் 16 வரை ஆஸ்திரியாவின் வியன்னாவில் நடைபெற்ற உலக எல்லைப் பாதுகாப்பு மாநாடு 2026-இல் பங்கேற்றதன் மூலம், இந்தியா கடல்சார் பாதுகாப்பில் தனது தலைமைத்துவத்தை வெளிப்படுத்தியதுடன், சர்வதேச ஒத்துழைப்புக்கான தனது உறுதிப்பாட்டையும் வலுப்படுத்தியது.
கூடுதல் தலைமை இயக்குநர் ஆனந்த் பிரகாஷ் படோலா தலைமையிலான மூன்று பேர் கொண்ட இந்தியக் குழு, சர்வதேச மன்றத்தில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தியது. வலுவான மற்றும் மீள்திறன் கொண்ட கடல்சார் நிர்வாகத்தை உருவாக்குவதில் நாட்டின் கவனத்தைப் பிரதிபலிக்கும் வகையில், அக்குழு தனது கடல்சார் எல்லைகளைப் பாதுகாப்பதில் இந்தியாவின் சிறந்த நடைமுறைகளை முன்வைத்தது.
2012-ல் நிறுவப்பட்ட உலக எல்லைப் பாதுகாப்பு மாநாடு, சர்வதேச ஒத்துழைப்பை வளர்க்கும் அதே வேளையில், எல்லை மேலாண்மையில் உருவாகி வரும் சவால்கள், தொழில்நுட்பப் புதுமைகள் மற்றும் சிறந்த நடைமுறைகள் குறித்து விவாதிப்பதற்காக மூத்த அரசு அதிகாரிகள், பாதுகாப்பு வல்லுநர்கள் மற்றும் தொழில்துறைத் தலைவர்களை ஒன்றிணைக்கும் ஒரு முதன்மையான சர்வதேசத் தளமாகும்.
எம்.பிரபாகரன்
