கென்யாவின் மொம்பாசா துறைமுகத்தில் ஐஎன்எஸ் திரிகாண்ட் தனது நிறுத்தத்தை நிறைவு செய்தது.

இந்திய கடற்படையின் முன்னணி வழிகாட்டு ஏவுகணைப் போர்க்கப்பலான ஐஎன்எஸ் திரிகண்ட், 2026 ஏப்ரல் 10 அன்று கென்யாவின் மொம்பாசா துறைமுகத்தில் தனது வருகையை நிறைவு செய்தது.

மேற்கு கடற்படை கட்டளையகத்தின் தலைமைத் தளபதியான துணை அட்மிரல் கிருஷ்ண சுவாமிநாதன் கென்யாவிற்கு வருகை தந்த அதே நேரத்தில் இந்தக் கப்பலும் துறைமுகத்தில் நின்றது. கப்பலில் நடைபெற்ற ஒரு முறையான விழாவின் போது, ​​மேற்குப் பகுதி தலைமைத் தளபதியால் கென்யா கடற்படையின் தளபதியான மேஜர் ஜெனரல் பால் ஓவோர் ஒட்டியேனோவிடம் INSAS துப்பாக்கிகளும் வெடிமருந்துகளும் முறைப்படி ஒப்படைக்கப்பட்டன.

கப்பலில் தங்கியிருந்தபோது நடத்தப்பட்ட செயல்பாடுகளில், சிறு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளைக் கையாளுதல் மற்றும் பராமரித்தல், வருகை, ஏறுதல், சோதனை மற்றும் கைப்பற்றுதல் (VBSS), கப்பலின் மேல்தளத்தில் சந்திப்புகள், சமூக சேவை, விளையாட்டுப் போட்டிகள் மற்றும் யோகா ஆகியவை அடங்கும். ஐ.என்.எஸ் திரிகண்ட் கப்பலின் கட்டளை அதிகாரியான கேப்டன் சச்சின் குல்கர்னி, கென்யா கடற்படையின் தளபதியான பிரிகேடியர் முகமது ஷீ ஷெமோட்டேவைச் சந்தித்தார். கப்பலில் ஒரு கலாச்சார மாலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

கப்பல் மேலதிக செயல்பாட்டுப் பணிகளுக்காகப் புறப்பட்டுச் சென்றுள்ளது. மொம்பாசா துறைமுக வருகையானது, பிராந்தியங்கள் முழுவதும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான பரஸ்பர மற்றும் முழுமையான முன்னேற்றம் என்ற இந்தியாவின் ‘ மகாசாகர்’ தொலைநோக்குப் பார்வையைப் பிரதிபலிப்பதோடு , தோழமை, பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் உதவும்.

Leave a Reply