பாதுகாப்புச் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங், 81 வது பணியாளர் பயிற்சிப் படிப்பின் பட்டமளிப்பு விழாவிற்காக, ஏப்ரல் 10, 2026 அன்று தமிழ்நாட்டின் வெலிங்டனில் உள்ள பாதுகாப்புப் படைப் பணியாளர் கல்லூரிக்கு (DSSC) வருகை தந்தார். அவர், 44 வெளிநாட்டுப் பங்கேற்பாளர்கள் உட்பட மாணவர் அதிகாரிகளுடன் கலந்துரையாடி, அவர்களின் அர்ப்பணிப்பையும் கடின உழைப்பையும் பாராட்டி, மதிப்புமிக்க இந்தப் பணியாளர் பயிற்சிப் படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்ததற்காக அவர்களை வாழ்த்தினார்.
தத்தமது நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துவதிலும், வலுவான உறவுகளை வளர்ப்பதிலும் அதிகாரிகள் ஆற்றிய பங்களிப்பைப் பாதுகாப்புச் செயலாளர் பாராட்டினார். மேலும், அவர்களின் எதிர்காலம் வெற்றிகரமாக அமைய வாழ்த்து தெரிவித்தார். பாதுகாப்புப் படைகளின் எதிர்கால மூத்த தலைமையை உருவாக்குவதில் பாதுகாப்புச் சேவை மையத்தின் (DSSC) முக்கியப் பங்கை அவர் எடுத்துரைத்தார். கல்லூரியில் நடத்தப்பட்ட பயிற்சிகளைப் பாராட்டிய அவர், குறிப்பாக இந்தியப் பாதுகாப்புப் படை அதிகாரிகளிடையே ஒருங்கிணைப்பையும் கூட்டுறவையும் ஊக்குவிக்கும் முயற்சிகளைப் பெரிதும் பாராட்டினார். இந்தப் பட்டமளிப்பு விழாவில் பல நட்பு நாடுகளின் பாதுகாப்புத் தூதர்கள் கலந்துகொண்டனர்.
1948-ல் நிறுவப்பட்ட DSSC, இந்தியப் பாதுகாப்புப் படைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட நடுத்தர அதிகாரிகளுக்கும், நட்பு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் தொழில்முறைக் கல்வியை வழங்கும் ஒரு முதன்மையான முப்படைகளின் பயிற்சி நிறுவனமாகும். உயர் பொறுப்புகளை ஏற்பதற்கான அவர்களின் திறன்களை மேம்படுத்துவதே இந்த நிறுவனத்தின் நோக்கமாகும். பல ஆண்டுகளாக, 2,000-க்கும் மேற்பட்ட சர்வதேச அதிகாரிகளும், 19,500 இந்திய அதிகாரிகளும் DSSC-யில் பயிற்சி பெற்றுள்ளனர். அவர்களில் பலர், உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களிலும் இராணுவங்களிலும் முக்கிய தலைமைப் பதவிகளை வகித்து வருகின்றனர்.
எம்.பிரபாகரன்
