ஆலங்கட்டி மழை மற்றும் கனமழையால் ஏற்பட்ட பயிர் சேதங்களை சரி செய்யுமாறு அதிகாரிகளுக்கு மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் உத்தரவு.

பல மாநிலங்களில் ஏற்பட்ட கனமழை மற்றும் ஆலங்கட்டி மழையை மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான் கவனத்தில் கொண்டுள்ளார். ஆலங்கட்டி மழை மற்றும் கனமழையால் ஏற்பட்ட பயிர் சேதங்களை ஆய்வு செய்யுமாறு வேளாண்மை அமைச்சக அதிகாரிகளுக்கு திரு சௌஹான் உத்தரவிட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட மாநிலங்களில் உள்ள அதிகாரிகளைத் தொடர்புகொண்டு தகவல்களைச் சேகரிக்குமாறு மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். விவசாய சகோதர சகோதரிகள் கவலைப்படத் தேவையில்லை என்றும், இந்த நெருக்கடியான நேரத்தில் மோடி அரசு விவசாயிகளுடன் துணை நிற்கும் என்றும் திரு சௌஹான் உறுதியளித்துள்ளார்.
ஆலங்கட்டி மழை மற்றும் கனமழையால் ஏற்பட்ட பயிர் சேதம் குறித்து திரு சௌஹான் இன்று சம்பந்தப்பட்ட மாநிலங்களின் வேளாண்மை அமைச்சர்களுடன் விவாதிப்பார்.

Leave a Reply