மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா, இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் இந்தியாவில் மிக நீண்ட காலம் பதவி வகித்த அரசாங்கத் தலைவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் என்று கூறியுள்ளார். சேவை, கடின உழைப்பு மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், முன்னாள் சிக்கிம் முதல்வர் பவன் குமார் சாம்லிங்கின் 8,930 நாள் சாதனையை முறியடித்து பிரதமர் மோடி அவர்கள் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
X தளத்தில் தனது பதிவுகளில், மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா, “சேவை, கடின உழைப்பு மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பில் வேரூன்றிய ஒரு மைல்கல். இன்று, பிரதமர் திரு நரேந்திர மோடி ஜி, முன்னாள் சிக்கிம் முதல்வர் பவன் குமார் சாம்லிங்கின் 8,930 நாள் சாதனையை முறியடித்து, இந்தியாவில் ஒரு அரசாங்கத்தின் மிக நீண்ட காலம் பணியாற்றிய தலைவராகிறார். முதலில் குஜராத் முதல்வராகவும், இப்போது பிரதமராகவும் பிரதமர் மோடி ஜியின் 8,931 நாட்கள் பொது வாழ்க்கை, தேசத்திற்கு முதலிடம் தரும் ஆட்சிமுறை, செயலில் நேர்மை மற்றும் ஒவ்வொரு குடிமகனுக்கும் அயராத சேவை ஆகியவற்றில் அவரது ஆழ்ந்த அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது. முன்னெப்போதும் இல்லாத நம்பிக்கை மற்றும் இணையற்ற சேவையின் மீது கட்டப்பட்ட ஒரு அரிய பாரம்பரியம்” என்று கூறினார்.
திரு அமித் ஷா கூறினார், “மோடிஜியின் பத்தாண்டு கால சேவை, அவருக்கென ஒரு சகாப்தத்தையே உருவாக்கியுள்ளது. ஏழைகளுக்கு அவர்களின் உரிமைகளை வழங்குவது, வளர்ச்சியில் புதிய மைல்கற்களை அமைப்பது அல்லது உலகளாவிய தளங்களில் தேசத்தின் பெருமையை உயர்த்துவது என, மோடி சகாப்தம் இந்தியாவை அடையாளம் காண முடியாத அளவிற்கு மாற்றியுள்ளது. இந்த புதிய இந்தியாவை வளர்ப்பதற்கு ஒரு வாழ்நாள் முயற்சி தேவைப்பட்டது, அதை பிரதமர் திரு நரேந்திர மோடிஜி வழங்கினார். 24 ஆண்டுகளுக்கும் மேலாக விடுமுறை எடுக்காமல் தேசத்திற்கும் அதன் மக்களுக்கும் சேவை செய்வது அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பின் வெளிப்பாடாகும். குஜராத் முதலமைச்சராக மூன்று முறையும், இந்தியாவின் பிரதமராக மூன்று முறையும் அவர் மக்களிடமிருந்து பெற்ற முன்னெப்போதும் இல்லாத அன்பை இது விளக்குகிறது. அவர் மீதான மக்களின் நம்பிக்கை, பாசம் மற்றும் ஆதரவு நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே செல்கிறது
திவாஹர்
