மத்திய கிழக்கில் (மேற்காசிய நாடுகளில்) ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக இந்தியாவில் எரிபொருள் மற்றும் உரங்களின் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் அதிகாரிகளுடன் அவசர உயர்மட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இந்தப் போரினால் இந்தியாவுக்குத் தேவையான கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, நாட்டில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுவதாக எழுந்துள்ள புகார்கள் குறித்துக் கேட்டறிந்த பிரதமர், பெட்ரோல், டீசல், எரிவாயு மற்றும் விவசாயிகளுக்கான உரங்கள் ஆகியவற்றின் இருப்பு நிலவரம் குறித்து அதிகாரிகளிடம் அறிக்கை கேட்டார்.
போர் நீண்ட காலம் நீடித்தால் அதனால் ஏற்படும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும், அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாட்டைப் போக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தயார் நிலையில் இருக்குமாறு அதிகாரிகளுக்குப் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்
எஸ். சதிஷ் சர்மா
