மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீட்டை மத்திய அரசு மேலும் 20% அதிகரித்துள்ளது.

உள்நாட்டில் சமையல் எரிவாயு உற்பத்தி அதிகரித்திருப்பதால் மாநிலங்களுக்கான வணிக பயன்பாட்டு சமையல் காஸ் சிலிண்டர் வினியோகத்தை 20 சதவீதம் வரை அதிகரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.இதன் மூலம் ஹோட்டல்கள் உணவகங்கள், பொது கேன்டீன்கள் பயன் பெறலாம். மேற்காசிய பிராந்தியத்தில் மூன்று வாரங்களை கடந்து இஸ்ரேல் – ஈரான் போர் நீடித்து வருகிறது. முதல் வாரத்தில் இருந்தே எரிவாயு வினியோக தொடரில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டருக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், ஹோட்டல்கள், உணவகங்கள், தேநீர் கடைகளுக்கு வணிக பயன்பாட்டு சமையல் காஸ் சிலிண்டர் வினியோகம் 30 சதவீதமாக குறைக்கப்பட்டது.

Leave a Reply