திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், அந்த நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கம்பரசம்பேட்டை ஊராட்சியில் உள்ள காவேரி நகர், கமலம் நகர், பாலாஜி நகர் மற்றும் ஜெயராம் நகர் பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு சாலை சீரமைப்பு, காவிரி குடிநீர், மழைநீர் வடிகால், தெருவிளக்கு.. போன்ற அடிப்படை வசதிகளைக் கூட அரசு செய்துக் கொடுக்காதக் காரணத்தால், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அப்பகுதி மக்கள் திருச்சி – கரூர் நெடுஞ்சாலையில் அறிவிப்பு பதாகைகளை வைத்துள்ளனர்.
இதற்கு தமிழக அரசும், மாவட்ட அரசு நிர்வாகமும் மற்றும் சம்பந்தப்பட்ட துறைச் சார்ந்த அதிகாரிகளும் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?!
பொறுத்திருந்துப் பார்ப்போம்..!
–கே. பி. சுகுமார்., B.E., ullatchithagaval@gmail.com
