டாஸ்மாக் பணியாளர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோர் கோரிக்கைகளில் முதலமைச்சர் தலையிட்டு சுமூகத் தீர்வுக் காண வேண்டும் என வலியுறுத்தி திமுக கூட்டணிக் கட்சிகளான மார்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் சிபிஐ(எம்.எல்) கட்சிகளின் தலைவர்கள் கையெழுத்திட்டு கூட்டு அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு மிக நெருக்கமாகவும், நினைத்த உடனே முதலமைச்சரை நேரில் சந்திக்கும் வாய்ப்பை பெற்றிருந்தும். இப்படி பொதுவெளியில் கோரிக்கை வைக்க வேண்டிய அவசியம் என்ன? முதலமைச்சரிடமே நேரில் வலியுறுத்தலாமே? அல்லது சட்டப்பேரவை நடக்கும்போது அக்கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் எழுத்துப்பூர்வமாக வலியுறுத்திருக்கலாமே?
–கே .பி. சுகுமார்.
