எதிர்வரும் தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் (Whistle) சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தகவலை இந்திய தேர்தல் ஆணையம் இன்று (ஜனவரி 22) அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இந்த தகவல் வெளியான சற்று நேரத்தில் தவெக தலைவர் விஜயின் ரசிகர்களும், தொண்டர்களும், அவரின் நலம் விரும்பிகளும் விசில் (Whistle) சின்னத்தை வெவ்வேறு வடிவங்களில் பல்வேறு வண்ணங்களில் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்து பகிர்ந்து வருகின்றனர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் மின்னணு வாக்கு இயந்திரத்தில் விசில் (Whistle) சின்னம் எந்த வடிவத்தில் பயன்படுத்தப்படுகிறதோ அதே வடிவத்தை எந்தவித மாற்றமும் செய்யாமல், உள்ளது உள்ளபடியே வாக்காளர்களின் பார்வைக்கு பகிர்ந்தால் மட்டுமே அது தமிழக வெற்றிக் கழகத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். இதை தவெக தலைமை தமது நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் உடனே அறிவுறுத்த வேண்டும்.
முக்கிய குறிப்பு: தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் அதாவது 234 தொகுதிகளிலுமே தமிழக வெற்றிக் கழகம் விசில் (Whistle) சின்னத்தில் போட்டியிடலாம்.
மத்திய அரசின் அழுத்தத்தால், இந்திய தேர்தல் ஆணையம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனி சின்னம்தான் வழங்கும், இதனால் தவெக தலைவர் விஜய் தேர்தலைப் புறக்கணித்து அரசியலை விட்டே ஓடிவிடுவார் என்று வதந்தி பரப்பி; வாயை வாடகைக்கு விட்டு பிழைப்பு நடத்தி வந்த கூலிப் படையினருக்கு இதன் மூலம் இந்திய தேர்தல் ஆணையம் முற்று புள்ளி வைத்திருக்கிறது.
–Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,
Mobile No.98424 14040. editorutlmedia@gmail.com
