டைமண்ட் லீக் தொடரில் கோப்பையை வென்ற நீரஜ் சோப்ராவிற்கு பிரதமர் நரேந்திர மோதி பாராட்டு.

டைமண்ட் லீக் தொடரின் ஈட்டி எறிதல் பிரிவில் நீரஜ் சோப்ரா கோப்பையை வென்றதன் மூலம் இத்தொடரின் வரலாற்றில் இந்தியர் ஒருவர் முதல் முறையாக வென்று சாதனையை படைத்திருக்கிறார் என்று பிரதமர் நரேந்திர மோதி பாராட்டு தெரிவித்துள்ளார்.

பிரதமர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

“புகழ்பெற்ற டைமண்ட் லீக் தொடரில் கோப்பையை வென்று    வரலாறு படைத்துள்ள முதல் இந்திய வீர்ர் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துக்கள்.  அவர் சிறந்த அர்ப்பணிப்பு மற்றும் நிலைத்தன்மையை வெளிப்படுத்தினார். அவரது தொடர் வெற்றிகள் இந்திய தடகளத்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு  செயல்களை வெளிக் காட்டுகின்றன”.

திவாஹர்

Leave a Reply