லக்னோவில் படைப்பிரிவினர் மருத்துவமனையில் ராணுவ மருந்துத் துறையை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள படைப்பிரிவினர் மருத்துவமனையில் ராணுவ மருந்துத் துறையைப் பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கிவைத்தார். இது ராணுவ மருந்துகளில் பிரத்யேகமாக கவனம் செலுத்தப்படும் நாட்டின் முதலாவது கல்வி மற்றும் செயல்பாட்டுத்துறையாகும். போர்க்கள மருந்து தயார் நிலையை மேம்படுத்துதல், ஆராய்ச்சியை முன்னெடுத்தல், உள்நாட்டு செயல்முறைகளை உருவாக்குதல், எதிர்கால போர்க்களங்கள் மற்றும் மனிதாபிமான நெருக்கடிகளுக்கான சிறப்பு நிபுணத்துவத்தை ஏற்படுத்துதல் ஆகியவை இத்திட்டங்களின் நோக்கமாகும்.

மருத்துவச் சேவைகள், தலைமை இயக்குநரகத்தின் (ராணுவம்) அமைக்கப்பட்டுள்ள இந்தத் துறை ஆயுதப்படைகளின் மருத்துவச் சேவைகளின் தயார் நிலையை வலுப்படுத்துவதில் முக்கிய மைல்கல்லாகவும் உள்ளது.

இந்நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்பு அமைச்சர், பொருளாதார, சமூக மேம்பாடு ஆகியவை நாட்டைக் கட்டமைப்பதில் முக்கிய அம்சங்கள் என்றாலும் நாட்டின் இறையாண்மை, முன்னேற்றத்தின் அடிப்படை என்பது அதனுடைய ராணுவத்தின் வலிமை, மனஉறுதி, ஆகியவற்றின் இடையே உள்ளதாகத் தெரிவித்தார். ராணுவ மருந்துத் துறையானது வீரர்களுக்கு மேம்பட்ட மருத்துவ ஆதரவை உறுதி செய்வதன் மூலம் தேசியப் பாதுகாப்பை வலுப்படுத்தும் என்றும் அதே சூழலில், தங்களுக்கு உரிய சிகிச்சையும் ஆதரவும் கிடைக்கும் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு அளிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply